மத்திய சமையலறைத் திட்டம் - மாணவர்களுக்குத் திருப்தியா?
(படம்: CNA/Raydza Rahman)
This audio is generated by an AI tool.
பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட மத்திய சமையலறைத் திட்டத்தை ஒட்டி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குக்
கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) பதிலளித்துள்ளார்.
பாரம்பரிய உணவுக் கடைகளில் மாணவர்கள் வாங்கும் உணவில் குறைந்த காய்கறிகளே உள்ளதாக திரு லீ குறிப்பிட்டார்.
"நாங்கள் முதன்முதலில் மத்திய சமையலறை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, ஆரம்ப வாரங்களில் உணவு வீணாவதைக் கவனித்தோம். குறிப்பாக இளைய தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே," என்றார் அவர்.
சிலரால் தங்கள் உணவை முடிக்க முடியவில்லை.
சிலருக்கு உணவு வகைகளின் சுவைக்குப் பழக நேரம் தேவைப்பட்டது.
உதாரணமாக, செலரி (Celery) மாணவர்களிடையே பிரபலமாக இல்லை; அதனால் ஏற்பாட்டாளர்கள் புரோக்கோலிக்கு (Broccoli) மாற்றினர். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றார் திரு லீ.
மத்திய சமையலறை உணவு திட்டத்தின் கீழ்,
🍲 தினசரி 6-14 வெவ்வேறு வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.
🍲 வாரந்தோறும் அல்லது தினசரி உணவுப் பட்டியல் மாறுகிறது.
"மாணவர்கள் எதை விரும்புகிறார்கள் என்று நாங்கள் ஊகிக்கவில்லை. சுவைகள்; வகைகள் குறித்த கருத்துகளைத் தொடர்ந்து சேகரிக்கிறோம்," என்றார் அமைச்சர்.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் சத்துணவுத் தரங்களைப் பூர்த்தி செய்கிறது புதிய திட்டம்.
எல்லா மாணவர்களின் உணவுத் தேவையையும் பூர்த்தி செய்வது சாத்தியமல்ல; சுவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கத் தொடர்ந்து முயற்சி செய்வோம் என்றார் அமைச்சர்.