Skip to main content
'எல்லாம் கடந்து நேரில் காணப்போகிறோம்'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

'எல்லாம் கடந்து நேரில் காணப்போகிறோம்'- பரவசத்தின் உச்சத்தில் கத்தார் செல்லும் சிங்கப்பூர் காற்பந்து ரசிகர்கள்

வாசிப்புநேரம் -

கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தொடங்க ஒரு சில நாள்களே உள்ளன.

ஆட்டங்களைக் காணக் காற்பந்து ரசிகர்கள் சிலர் சிங்கப்பூரிலிருந்தும் கத்தாருக்குச் செல்கின்றனர்.

அதற்கான முயற்சிகளில் அவர்கள் பல மாதங்கள் முன்னரே இறங்கிவிட்டனர். 

அவர்களில் கவிந்திரனும் ஒருவர்.

Related article image

அவர் அர்ஜெண்டினாவும் போலந்தும் பொருதும் ஆட்டம் உட்பட 4 ஆட்டங்களைக் காணவுள்ளார். 

"எந்த ஆட்டங்களுக்குச் சீட்டுகள் கிடைக்கப்போகின்றன என்றெல்லாம் தெரியாது. எது கிடைத்தாலும் சரி என்று முதல் சுற்றுக்கு விண்ணப்பம் செய்தோம்."

முதல்முறையாக உலகக் கிண்ணக் காற்பந்து ஆட்டங்களை நேரில் சென்று காணவிருக்கிறார்.....

"இது எனது பல நாள் ஆசை. நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கப்போவதால் இன்னும் மகிழ்ச்சி."

என்றார் கவிந்திரன்.

கத்தாரில் 4 ஆட்டங்களைக் காணவுள்ள குமார், ஆட்ட நுழைவுச்சீட்டுகள் முதல்முறை கிடைக்கவில்லை என்றார்.

Related article image

வருத்தமும், நம்பிக்கையும் கலந்த உணர்வு....எங்கே பார்க்க முடியாமல் போய்விடுமோ ?

"2ஆவது சுற்றில் மீண்டும் முயற்சி செய்தபோது கிடைத்தன."

ஆட்ட நுழைவுச்சீட்டுகளைத் தாண்டி, கத்தாருக்கு விமானச் சீட்டுகளும்,ஹோட்டல் கிடைப்பதும் சிரமமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் எல்லாவற்றையும் கடந்து ஆட்டங்களை நேரில் காணும் நாள் வரப்போவதை நினைத்துப் பரவசமாக உணர்வதாய் அவர் சொன்னார். 

9 வயதிலிருந்து உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளைப் பார்த்து வரும் பஷீர், இம்முறை முதல்முறையாக கத்தாருக்குச் சென்று 3 ஆட்டங்களை நேரில் காணவுள்ளார்.

 "கறுப்பு வெள்ளை திரைத் தொலைக்காட்சியில் என் தந்தை, சகோதரர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் ஆகியோருடன் சேர்ந்து ஆட்டங்களைப் பார்த்ததுண்டு."

"ஆட்டங்களை நேரில் காண வேண்டும் என்பது பல நாள் ஆசை. அது கத்தாரில் நிறைவேறவுள்ளது. ஏப்ரலில் நுழைவுச் சீட்டுகளுக்கு விண்ணப்பம் செய்தேன்...ஆகஸ்ட் மாதம் தான் அவை கிடைத்தன."

என்றார் அவர்.

காற்பந்து விளையாட்டிலேயே ஆகப் பெரிய போட்டி உலகக் கிண்ணம் என்று கூறலாம்.

அதை ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும் என்பது பல காற்பந்து ரசிகர்களின் ஆசை.

அதுவும் கத்தார் பல பில்லியன் டாலர் செலவு செய்து ஏற்பாடு செய்திருக்கும் இந்தப் போட்டிகள் மிகவும் வித்தியாசமான ஓர் அனுபவத்தைக் கொடுக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். 

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

மேலும் செய்திகள் கட்டுரைகள்