Skip to main content
வெளிநாட்டு ஊழியர் விடுதியில் பழுதடைந்த கழிவறை, உடைந்த சுவர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர் விடுதியில் பழுதடைந்த கழிவறை, உடைந்த சுவர் - நிறுவனம் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு ஊழியர் விடுதியில் பழுதடைந்த கழிவறை, உடைந்த சுவர் - நிறுவனம் மீது குற்றச்சாட்டு

(படம்: Google Street View)

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியின் மோசமான சூழல் தொடர்பில் அதனை நிர்வகிக்கும் நிறுவனம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

KT&T Engineers and Constructors நிறுவனம் மீது 20க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

31 சுங்கை காடுட் அவென்யூவில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியை அது நிர்வகிக்கிறது.

சென்ற ஆண்டு (2025) விடுதியில் பல குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பழுதடைந்த கழிவறைகள், உடைந்துபோன சுவர்கள், உட்கூரையில் ஓட்டை ஆகியவை அதில் அடங்கும்.

பொது நடைபாதையில் உடைந்துபோன தரைக் கற்கள், வெளியே தொங்கும் கம்பிகள், சேதமடைந்த விளக்கு ஆகியவையும் நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டன.

விடுதியை நிர்வகிக்கும் உரிமத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 12 மாதம் வரை சிறைத்தண்டனை, 50,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு (ஜூலை) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்