Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படும்'

பெரிய சாதனங்களோடு சிறுகுழுவாக ஊழியர்களைப் பல இடங்களுக்கு அனுப்பவேண்டிய சவால் இருப்பதாகச் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் முறையிடுவதாக போக்குவரத்து மூத்த துணையமைச்சர் ஏமி கோர் கூறினார்.

வாசிப்புநேரம் -
'வெளிநாட்டு ஊழியர்களை  ஏற்றிச்செல்லும் லாரிகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படும்'

(Raj Nadrajan /Today)

வெளிநாட்டு ஊழியர்களை
ஏற்றிச்செல்லும் லாரிகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து மூத்த துணையமைச்சர்
ஏமி கோர் கூறியிருக்கிறார்.

வேகக் கட்டுப்பாடு, மழையில் ஊழியர்களை நனையாமல் அழைத்துச் செல்வது ஆகியவை கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்.

உயிர்களையும் பாதுகாத்து, வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க, நடுநிலையான அணுகுமுறை அவசியம் என்று டாக்டர் கோர் குறிப்பிட்டார்.

எந்த மாற்றமும் நீண்ட காலத்துக்குச் செயல்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பெரிய சாதனங்களோடு சிறுகுழுவாக ஊழியர்களைப் பல இடங்களுக்கு அனுப்பவேண்டிய சவால் இருப்பதாகச் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் முறையிடுவதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சாதனங்களை லாரியிலும் ஊழியர்களைப் பேருந்திலும் தனித்தனியாக ஏற்றிச்செல்வது நடைமுறையில் சிரமம் என்று நிறுவனங்கள் முறையிட்டுள்ளன.

உற்பத்தி, கட்டுமானம் போன்ற துறைகளில் பெரிய அளவில் ஊழியர்களை ஏற்றிச்செல்வதற்குப் போதுமான பேருந்துகளும் பேருந்து ஓட்டுநர்களும் இல்லை என்று தனியார்ப் பேருந்து உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

சவால்களைப் புரிந்துகொண்டு ஊழியர்களைப் பாதுகாப்பாக ஏற்றிச்செல்வதற்கான முயற்சிகள் மேம்படுத்தப்படும் என்று டாக்டர் கோர் கூறினார்.


 

ஆதாரம் : Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்