சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கியிருந்தவருக்கு வேலை வாய்ப்பு தந்த ஆடவருக்குச் சிறை
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
சிங்கப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த ஊழியரை வேலைக்குச் சேர்த்த ஆடவருக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷைச் சேர்ந்த அந்த ஊழியர் 26 வயது தாலுக்தார் பாபேல் (Talukdar Md Pabel).
அவரது சிறப்பு அனுமதி (Special Pass) காலாவதியான பிறகு அவர் சில மாதங்கள்
சிங்கப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தார்.
2021ஆம் ஆண்டில் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
பாபேலுக்கு ஒரு மாதச் சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
அவர் நாடு கடத்தப்பட்டார்; மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
பாபேல் சிங்கப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தபோது 46 வயது ஜஹாங்கீர் முகமது (Jahangir Mohammed) அவருக்கு வேலை வாய்ப்பளித்ததாக விசாரணையில் தெரியவந்தது.
ஜஹாங்கீரும் பங்களாதேஷைச் சேர்ந்தவர்; அவர் வேலை அனுமதி பெற்றிருந்தார்.
அவர் பாபேலின் ஆவணங்களைச் சரிபார்க்காமல் அவரை வேலைக்குச் சேர்த்துக்கொண்டார் என்று கூறப்பட்டது.
ஊழியர்கள் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகளிடம் பொய்யுரைப்பதற்கு
ஜஹாங்கீர் பயிற்சி தந்ததும் கண்டறியப்பட்டது.
ஜஹாங்கீரின் குற்றத்திற்கு அதிகபட்சம் ஈராண்டுச் சிறைத்தண்டனையும் 6,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi