ஈஸ்வரனின் குற்றச்சாட்டுகளைக் கடைசி நேரத்தில் திருத்தக் காரணம்?
வாசிப்புநேரம் -
முன்னாள் அமைச்சர் S ஈஸ்வரனுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில் சில சிரமங்கள் இருக்கலாம் என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.
நேற்று (24 செப்டம்பர்) காலை ஈஸ்வரன் 5 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
- அரசாங்க ஊழியராக இருந்துகொண்டு விலைமதிப்புள்ள பொருள்களைப் பெற்ற 4 குற்றச்சாட்டுகள்
- நீதிக்கு இடையூறு விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டு
தொழிலதிபர் ஓங் பெங் செங்கிடமிருந்து (Ong Beng Seng) பரிசுகளைப் பெற்றதாகக் கூறும் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் இறுதிக் கட்டத்தில் திருத்தப்பட்டு, பிரிவு 165இன் கீழ் கொண்டுவரப்பட்டன.
பிரிவு 165இன் கீழ் அதிகபட்சம் ஈராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கலாம்.
ஊழல் குற்றச்சாட்டில் அதிகபட்சமாக விதிக்கப்படும் ஏழாண்டுச் சிறைத்தண்டனையைவிட அது குறைவு.
ஈஸ்வரனின் குற்றச்சாட்டுகளைத் திருத்துவதற்குக் காரணம்?
நியாயமான சந்தேகத்தைத் தாண்டி ஈஸ்வரனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில் ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்களை அலுவலகம் கருத்தில் எடுத்துக்கொண்டதாய்த் தெரிவிக்கப்பட்டது.
வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் ஈஸ்வரனும் தொழிலதிபர் ஓங்கும் தங்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளில் ஊழல் நடந்ததாகச் சொல்லப்படுவதை மறுக்கலாம் என்று அலுவலகத்தின் பேச்சாளர் கூறினார்.
குற்றச்சாட்டுகளைத் திருத்துவதால் பொதுமக்களின் அக்கறைக்கு ஏற்ப நியாயமான, நேர்மையான முடிவு கிடைக்குமா என்பதையும் அலுவலகம் ஆராய்ந்திருக்கிறது.
ஈஸ்வரன் இதற்கு முன் எதிர்நோக்கிய 2 ஊழல் குற்றச்சாட்டுகளில் திரு ஓங்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இதுவரை திரு ஓங் மீது குற்றஞ்சாட்டப்படவில்லை.
ஈஸ்வரனின் வழக்கு முடிவுக்கு வந்தவுடன் திரு ஓங்கின் வழக்குப் பற்றி முடிவு செய்யப்படும் என்று அலுவலகம் இவ்வாண்டு ஜனவரி மாதம் சொன்னது.
திரு ஓங்கின் வழக்குப் பற்றி விரைவில் முடிவு செய்யப்படுமென அலுவலகம் நேற்று (24 செப்டம்பர்) தெரிவித்தது.

ஆதாரம் : CNA/rc(ac)