ஈஸ்வரன் வழக்கு விசாரணை தொடக்கம்
வாசிப்புநேரம் -

(படம்: Jeremy Long/CNA)
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரனின் வழக்கு விசாரணை இன்று காலை 10 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் தொடங்கியிருக்கிறது.
அவர் இன்று காலை வெள்ளை Toyota காரில் நீதிமன்றத்துக்கு வந்தார்.
அவர் இன்று காலை வெள்ளை Toyota காரில் நீதிமன்றத்துக்கு வந்தார்.

மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங் (Davinder Singh) திரு ஈஸ்வரனின் வழக்கறிஞர் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார்.

திரு சிங் முன்னாள் பிரதமர்கள் லீ குவான் யூ, லீ சியென் லூங் ஆகியோரை சிவில் வழக்குகளில் பிரதிநிதித்திருக்கிறார்.
உயர் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியது.
உயர் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியது.

பொதுமக்கள் வழக்கு விசாரணையைக் காண நீதிமன்றத்திற்குள் செல்லலாம்.
நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர்.
நுழைவுச்சீட்டுகள் இன்று அதிகாலை முதல் விநியோகிக்கப்பட்டன.
விசாரணை தொடங்குவதற்கு 10 நிமிடம் இருக்கும்போது நீதிமன்ற வாசல் கதவுகள் மூடப்பட்டன.
வழக்கு நீதிபதி வின்சென்ட் ஹூங் முன்னிலையில் நடைபெறுகிறது.
ஆதாரம் : CNA