Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சுமார் $2000ஐச் சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்ட முன்னாள் காவல்துறை அதிகாரிக்குச் சிறை

வாசிப்புநேரம் -
முன்னாள் சிங்கப்பூர்க் காவல்துறை அதிகாரி ஒருவர் வேலை செய்யும்போது சுமார் 2,000 வெள்ளி ரொக்கத்தைத் தவறாகக் கையாண்டதால் அவருக்கு 7 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் இணையச் சூதாட்டத்திற்கு அடிமையானவர்.

அதனால் ஏற்பட்ட கடன்களை அடைக்க அவர் பணத்தை எடுத்திருக்கிறார்.

சிங்கப்பூர் நிரந்திரவாசியான முகமது அம்ஸத் கான் அபுவாயுபுல் அன்சாரி (Muhammad Amzath Khan Abuayubul Ansari) அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

குற்றம் நடந்த நேரத்தில் அவர் ரோச்சோர் அக்கம்பக்கக் காவல்துறை நிலையத்தில் பணிபுரிந்தார்.

அங்கு சுமார் 2 ஆண்டுக்கு வேலை செய்தார்.

அவருக்கு அப்போது 24 வயது.

அவர் காவல்துறையிலிருந்து கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் 26ஆம் தேதி பதவி விலகினார்.

குற்றச்செயல் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளிச்சத்திற்கு வந்தது.

19 வயது பெண் தம்முடைய கைப்பையில் 1,700 வெள்ளி ரொக்கத்தைக் காணவில்லை என்று காவல்துறையிடம் புகாரளித்தார்.

தனியார் வாகனத்தில் ஏறியபோது தம்முடைய கைப்பையை அவர் அங்கிருந்த நடைபாதையில் மறந்து வைத்துச்சென்றார்.

அங்கிருந்த கூட்டுரிமை வீட்டின் பாதுகாவல் அதிகாரிகள் அந்தப் பையைக் கண்டுபிடித்தனர்.

பையை அம்ஸத் பணிபுரியும் காவல்துறை நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல்துறையிடமிருந்து பையைப் பெற்ற அந்தப் பெண் அதிலிருந்த ரொக்கத்தைக் காணவில்லை என்று உணர்ந்தார்.

அதன் தொடர்பில் காவல்துறையிடம் புகாரளித்தார்.

அம்ஸத் அந்தப் பணத்தை எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்