Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பாலர் பள்ளியில் சிறாரை மானபங்கம் செய்த சமையல்காரருக்கு 9 ஆண்டுச் சிறை

வாசிப்புநேரம் -
பாலர் பள்ளியில் சிறாரை மானபங்கம் செய்த சமையல்காரருக்கு 9 ஆண்டுச் சிறை
(படம்: LinkedIn / CNA)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பாலர் பள்ளியில் 3 பிள்ளைகளை மானபங்கம் செய்த சமையல்காரருக்கு 9 ஆண்டு, 4 மாதம், 7 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

61 வயது மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான தியோ குவான் ஹுவாட் (Teo Guan Huat) பிள்ளைகளை மானபங்கம் செய்த 3 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

மேலும் 5 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

பாலர்பள்ளியில் சுமார் 7 மாதக் காலத்திற்கு அவர் 3 பிள்ளைகளைத் தூங்கும் நேரத்தின்போது அடிக்கடி மானபங்கம் செய்திருக்கிறார்.

பிள்ளைகளின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகப் பாலர்பள்ளியின் பெயர் வெளியிடப்படவில்லை.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வேறொரு சம்பவம் தொடர்பில் கண்காணிப்புக் கேமரா பதிவுகளைச் சரிபார்த்தபோது தியோவின் குற்றங்கள் தெரிய வந்தன.

தியோ வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

மறுமாதம் கண்காணிப்புக் கேமரா பதிவுகள் அழிக்கப்பட்ட பின்னர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன் தொடர்பில் 3 பெண்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அழிக்கப்பட்ட பதிவுகளைக் காவல்துறை மீட்டது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தியோ கைது செய்யப்பட்டார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்