மோசடி - $145,000 இழப்பு, முன்னாள் ராணுவ அதிகாரி மீது குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
முன்னாள் ராணுவ அதிகாரி பெஞ்சமின் சோங் (Benjamin Song) மோசடி செய்து, பொதுமக்களிடமிருந்து சுமார் 145,000 வெள்ளியைப் பெற்றதாக நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 10) குற்றஞ்சாட்டப்பட்டது.
தாயாரின் மருத்துவச் சிகிச்சைக்கும் முதலீட்டுக்கும் பணம் தேவைப்படுகிறது என்று பொய் சொல்லிப் பலரிடமிருந்து பணத்தைப் பெற்றதாகக் கூறப்பட்டது.
ஆனால் அவர் தன் சொந்தக் கடன்களை அடைக்கப் பணத்தைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
மோசடிகள் 2021ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து சென்ற ஆண்டு மார்ச் மாதம்வரை நடந்ததாகக் கூறப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களிடம் அவர் 1,000 வெள்ளியிலிருந்து 27,000 வெள்ளிவரை கேட்டதாகச் சொல்லப்பட்டது.
அவர் மீது 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
அவரது பிணைத்தொகை 100,000 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டது.
அடுத்த நீதிமன்ற விசாரணை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும்.
மோசடிக் குற்றத்திற்கு 10 ஆண்டுவரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA