சிங்கப்பூர் தமிழ் வானொலியின் முன்னாள் படைப்பாளர், செய்தி வாசிப்பாளர் திரு S. பீட்டர் காலமானார்
வாசிப்புநேரம் -
படம்: mediacorp.sg/pradhanavizha
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர்த் தமிழ் வானொலியின் முன்னாள் படைப்பாளரும் செய்தி வாசிப்பாளருமான திரு பீட்டர் சவரிமுத்து காலமானார். அவருக்கு வயது 77.
திரு பீட்டர் 1968ஆம் ஆண்டு தமது ஊடகத் துறை பயணத்தைத் தொடங்கினார்.
திரு சோமசுந்தரம், திரு S P பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணைந்து 'தமிழில் பேசுவோம்' என்ற வானொலி நிகழ்ச்சியை வழிநடத்தினார். அது தமிழ் ஊடகத் துறையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியது.
சிங்கப்பூர்த் தமிழ் ஊடகத்துறையில் முக்கிய பங்கு வகித்தவரான திரு பீட்டர் விளையாட்டு நிகழ்ச்சிகளை நேரடியாகத் தொகுத்து வழங்குவதிலும் வல்லவராக இருந்தார்.
தமிழ் பேசும் நேயர்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமான குரலாகவும் அவர் மாறினார்.
தமிழ்ச்செய்தி வாசிப்பாளர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை உருவாக்கவும் திரு பீட்டர் பெரும் பங்காற்றியுள்ளார்.
2011இல் அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். இருந்தபோதிலும் தமிழ்ச்செய்தியில் அவரின் சேவை தொடர்ந்தது. மீடியாகார்ப்பின் ஒலி 968 வானொலியில் செய்திகளைத் தொகுத்து, படைத்து வந்தார்.
தேசிய தின அணிவகுப்புகளின் நேரடி வர்ணனையாளராகவும் திரு பீட்டர் இருந்துள்ளார்.
சிங்கப்பூர்த் தமிழ் ஊடகத்துறைக்கு அவர் அளித்த பங்களிப்புகளைக் கௌரவிக்கும் விதமாக இந்த ஆண்டு நடைபெற்ற மீடியாகார்ப்பின் பிரதான விழாவில் திரு பீட்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஆதாரம் : Mediacorp Seithi