மாணவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
This audio is generated by an AI tool.
மாணவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் ஆசிரியர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர்மீது மொத்தம் ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குற்றம் புரிந்த ஆடவர், பாதிக்கப்பட்ட மாணவரின் அடையாளங்கள், சம்பவம் நடந்த இடம் ஆகியவற்றை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அறிக்கைகளின்படி சம்பவங்கள் 2023ஆம் ஆண்டு பிப்ரவரிக்கும் டிசம்பருக்கும் இடையிலான காலகட்டத்தில் நடந்தது.
மே மாதத்தில் நிகழவிருக்கும் விசாரணைக்கு முந்திய சந்திப்பினால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
ஆடவர் ஜனவரி 2024இல் பணிநீக்கம் செய்யப்பட்டதாக CNA செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த கல்வி அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
வயது குறைந்த ஒருவருடன் தகாத செயலில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை, 10,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
சிறாரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுச் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.