Skip to main content
Wah!Banana முன்னாள் நடிகர் பாலியல் பலாத்கார வழக்கு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Wah!Banana முன்னாள் நடிகர் பாலியல் பலாத்கார வழக்கு - குற்றமற்றவர் என்று தீர்ப்பு

வாசிப்புநேரம் -
Wah!Banana முன்னாள் நடிகர் பாலியல் பலாத்கார வழக்கு - குற்றமற்றவர் என்று தீர்ப்பு

படம்: CNA/Marcus Mark Ramos

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Tinder செயலியில் சந்தித்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட Wah!Banana முன்னாள் நடிகர் லேவ் பான்ஃபிலோவ் (Lev Panfilov) குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

30 வயது பான்ஃபிலோவ் ரஷ்யாவைச் சேர்ந்தவர். அவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி.

முன்னர் அவருக்கு 11 ஆண்டு 6 மாதச் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

மேல்முறையீட்டில் அந்தத் தீர்ப்பு நிராகரிக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டியவர் வழங்கிய சாட்சியில் முரண்பாடுகள் இருந்ததாக நீதிபதி சுஷில் நாயர் குறிப்பிட்டார்.

அதனால் நியாயமான சந்தேகங்கள் எழுந்ததாக நீதிபதி கூறினார்.

வேறு ஆதாரங்கள் இல்லாத வழக்குகளில் குற்றஞ்சாட்டுபவரை முழுமையாக நம்பமுடியவேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

தீர்ப்பளித்த பிறகு பான்ஃபிலோவ் மகிழ்ச்சி அடைந்தார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்