Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வளர்ப்புப் பெற்றோர் பிள்ளைகளின் சுகாதார, கல்வி விவரங்களைப் பெறலாம்

வாசிப்புநேரம் -
வளர்ப்புப் பெற்றோர் பிள்ளைகளின் சுகாதார, கல்வி விவரங்களைப் பெறலாம்
வெளியீடு : 08 Apr 2026 08:20PM புதுப்பிப்பு : 09 Apr 2026 11:00AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வளர்ப்புப் பெற்றோர் விரைவில் தங்களின் பராமரிப்பில் உள்ள பிள்ளைகளின் சுகாதார, கல்வி விவரங்களை இணையம் வழி பார்க்கலாம். 
 
அத்துடன் பிள்ளைகளின் சார்பில் அவர்கள் HealthHub செயலிவழி மருத்துவரைக்  காணவும் பதிவுசெய்யலாம்.  அதற்கான ஏற்பாடுகளைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு செய்கிறது. தற்போது அத்தகைய தகவல்களைப் பெறப் பெற்றோரின் உதவியை வளர்ப்புப் பெற்றோர் நாடவேண்டியுள்ளது. பிள்ளைகளுக்கு உரிய சுகாதாரப் பராமரிப்புக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். 
 
வளர்ப்புப் பெற்றோர் எத்தகைய தகவல்களைப் பெற முடியும் என்பதை ஆராய வேண்டியிருப்பதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் கோ பெ மிங் (Goh Pei Ming) கூறினார்.  பெற்றோர் பிள்ளை உறவு எப்படி இருந்தது, எந்தச் சூழலில் பிள்ளைகள் வளர்ப்புப் பெற்றோரிடம் அனுப்பப்பட்டனர் 
போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர். 
 
பிள்ளைகளுக்குச் சிறந்த பராமரிப்பை வழங்குவதற்குத் தேவையான தகவல்கள் வளர்ப்புப் பெற்றோருக்குக் கிடைப்பதை உறுதிசெய்வதே முக்கியக் குறிக்கோள் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்