Skip to main content
மறைந்து வரும் பாரம்பரியத் தொழில்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மறைந்து வரும் பாரம்பரியத் தொழில்கள் - நவீனத்துக்கும் இடமளிக்கும் படச்சட்டத் தொழில்

நிழற்படத்திற்கு அழகுசேர்ப்பது அதன் படச்சட்டம். சிங்கப்பூரில் படச்சட்டத் தொழிலைத் தலைமுறை தலைமுறையாகச் செய்து வரும் சில குடும்பங்கள் இருந்துவருகின்றன.  

வாசிப்புநேரம் -

நிழற்படத்திற்கு அழகுசேர்ப்பது அதன் படச்சட்டம். சிங்கப்பூரில் படச்சட்டத் தொழிலைத் தலைமுறை தலைமுறையாகச் செய்து வரும் சில குடும்பங்கள் இருந்துவருகின்றன.

Related article image

இருப்பினும், சிங்கப்பூரில் பரவலாகக் காணப்பட்ட படச்சட்டக் கடைகள் தற்போது கணிசமாகக் குறைந்துள்ளன.

ஒரு காலத்தில் பல படங்களைச் சட்டமிட்டு மாட்டி வைத்த வழக்கம், தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் மாறிப்போனது.

Related article image

இப்போது குடும்பப் படங்கள், சமய அடிப்படையிலான படங்கள், பட்டமளிப்புப் படங்களுக்கு மட்டுமே சட்டங்களை மக்கள் அதிகம் வாங்குவதாகக் கடைகள் தெரிவித்தன.

Related article image

1948ஆம் ஆண்டு முதல் திரு. செய்யது யூசுஃப்ஷா குடும்பத்தினர் படச்சட்டத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆணி, சுத்தியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பாரம்பரிய முறையிலும் இயந்திரங்களைப் பயன்படுத்தி நவீன முறையிலும் படச்சட்டங்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

பூச்சிகள் படச்சட்டங்களுக்குள் புகாமல் இருக்க 'கோந்துத் தாள்' என்னும் பசை பயன்படுத்தப்படுகிறது. பூச்சிகள் ஏற்படுத்தும் சேதத்தைத் தடுக்க அந்தப் பசை உதவுகிறது.

Related article image

இப்படித் தொழிலுக்கென பல நுணுக்கங்கள் இருப்பதாகக் கூறுகிறார் கடையின் உரிமையாளர். மேலும் பாரம்பரியமிக்க இந்தத் தொழிலில் இளையர்கள் இறங்கினால், நவீனத்தையும் புகுத்தி வெற்றி காணலாம் என்கிறார் இவர்.

இந்தியர்களிடையே, சட்டங்கள் செய்து படத்தை மாட்டும் வழக்கம் இன்னமும் பிரியமான ஒன்றாக இருப்பதாகச் சொன்னார் அவர்.

Related article image

இந்தியர்கள் விரும்பும் படச்சட்டம் எது? பாரம்பரிய முறைக்கும் நவீன முறைக்கும் உள்ள வேறுபாடு என்ன? இதன் எதிர்காலம் என்ன? போன்ற விவரங்களை 'செய்தி' கடை உரிமையாளரிடம் கேட்டறிந்தது.
  

மேலும் செய்திகள் கட்டுரைகள்