எரிபொருள் விலை உயர்வு: பள்ளிப் பேருந்து நிறுவனங்களுக்கு நிதியுதவி
வாசிப்புநேரம் -
(படம்: TODAY)
மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்க கல்வி அமைச்சு பள்ளிப் பேருந்து நிறுவனங்களுக்குத் தற்காலிக ஆதரவு வழங்குவதாக அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) தெரிவித்துள்ளார்.
தொடக்கப்பள்ளிகள், சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளிகளில் வழக்கமான பேருந்துச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
கடந்த மாதம் பள்ளிப் பேருந்துக் கட்டண வருவாயில் 13 விழுக்காட்டுக்கு நிகரான ஆதரவை அரசாங்கம் வழங்கியது.
எரிபொருள் விலை அதிகமாக இருப்பதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று திரு லீ சொன்னார்.
மேலும், வரும் ஜூலை மாதத்திலிருந்து பள்ளிப் பேருந்து நிறுவனங்களுக்கு கட்டணங்களை உயர்த்த அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.
பேருந்துச் சேவை நிறுவனங்கள், நியாயமான கட்டண மாற்றங்கள் குறித்து பள்ளிகளுடன் இணைந்து செயல்படுமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன் பெரேரா, அப்துல் முஹாய்மின் அப்துல் மாலிக் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு திரு லீ எழுத்து வடிவில் பதில் சொன்னார்.

ஆதாரம் : Mediacorp Seithi