Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இறுதி ஊர்வலத்தில் - சட்டவிரோதக் கும்பல் முழக்கவரிகளை உச்சரித்த சந்தேகம் - மூவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -

ஹவ்லோக் ரோட்டில் (Havelock Road) நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் சட்டவிரோதக் கும்பல் முழக்கவரிகளை உச்சரித்ததாகச் சந்தேகிக்கப்படும் மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி நடந்தது.

46 வயதுக்கும் 63 வயதுக்கும் இடைப்பட்ட ஆடவர்கள் மூவர், சட்டவிரோதக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அவர்கள் கும்பல் முழக்கவரிகளை உச்சரித்ததுடன், குறிப்பிட்ட கை சைகைகளைக் காட்டியதாகவும் நம்பப்படுகிறது.

சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் பகிரப்பட்டது.

இறுதி ஊர்வலத்தின்போதும், ஈமச்சடங்கின்போதும் ஆடவர்கள் முகக்கவசம் அணியவில்லை என்று சந்தேகிக்கப்படுகிறது.

மூவரும் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மீண்டும் அடுத்த மாதம் 28-ஆம் தேதி நீதிமன்றம் திரும்புவார்கள்.

சட்டவிரோதக் கும்பல் உறுப்பினர் என்பது நிரூபிக்கப்பட்டால், மூவாண்டு வரை சிறைத்தண்டனையோ 5,000 வெள்ளி வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்