Skip to main content
சுகாதாரப் பரமாரிப்பு செயற்கை நுண்ணறிவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சுகாதாரப் பரமாரிப்பு செயற்கை நுண்ணறிவு - இனி அதிகம் பயன்படுமா?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

செயற்கை நுண்ணறிவைச் சார்ந்த சுகாதாரப் பரமாரிப்பு முன்னோடித் திட்டம் விரிவுபடுத்தப்படலாம்.

அது பொதுத்துறையில் வெற்றி கண்டால் தனியார்துறையிலும் அறிமுகம் காணலாம்.

SIMFONI எனும் செயற்கை நுண்ணறிவு நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.

நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், கண் சம்பந்தப்பட்ட நோய் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும்.

SIMFONI நடைமுறை எதிர்காலத்தில் மேலும் பலவற்றைக் கையாளத் தயாராகலாம்.

தற்போது அரசாங்க மருத்துவ நிலையங்கள் நோய்களைக் கண்டறியவும், சிகிச்சைகள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறித்து ஆலோசனை வழங்கவும் அந்த நடைமுறை பயன்படுகிறது.

சிங்கப்பூரின் மருத்துவத் தரவுகள், வழிகாட்டிகள் உள்ளிட்டவை SIMFONI நடைமுறையில் பதிவேற்றப்படுகின்றன.

நோயாளிகளின் தனிநபர் விவரங்களைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்
அதே சமயம் பாதுகாப்பு அம்சங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் தெரிவித்தார்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்