Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

டெக்சஸ் தலைவர்களுடன் பொருளாதாரம் பற்றிப் பேசிய துணைப்பிரதமர் கான்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

துணைப்பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங் (Gan Kim Yong) அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத் தலைவர்களையும் கொள்கை வகுப்பாளர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

உலகப் பொருளாதாரச் சூழல், தடையற்ற இணைப்புடன் சந்தைகளை வைத்திருப்பதன் முக்கியத்துவம் ஆகியன குறித்து அவர்கள் கருத்துப் பரிமாறினர்.

வருங்காலத்தில் இரு நாடுகளிலும் வலுவான தொழில்துறை, நீடித்த வளர்ச்சி, நல்ல வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை உருவாக்கும் வழிகளையும் அவர்கள் ஆராய்ந்தனர்.

திரு கான் பொருளாதார உறவை வலுப்படுத்த அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று (15 ஏப்ரல்) அவருடைய பயணத்தின் மூன்றாவது நாள்.

விரைவில் அவர் வாஷிங்டனில் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார்.

திரு கான் நாளை மறுநாள் (17 ஏப்ரல்) வரை அமெரிக்காவில் இருப்பார்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்