அமெரிக்க, சிங்கப்பூர் நிறுவனங்கள் சேர்ந்து பணியாற்றவேண்டும் - துணைப் பிரதமர் கான்
வாசிப்புநேரம் -

(படம்: Facebook/Gan Kim Yong)
துணைப் பிரதமர் கான் கிம் யோங் (Gan Kim Yong) வட்டாரத்தில் உள்ள விநியோகத் தொடர்களை வலுப்படுத்த அமெரிக்க நிறுவனங்கள் உள்ளூர் நிறுவனங்களோடு சேர்ந்து பணியாற்றவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரிலுள்ள அமெரிக்க வர்த்தகச் சபையின் அலுவலக மேம்பாட்டுப் பணி நிறைவடைந்துள்ளது. அலுவலகத்தின் திறப்பு விழாவில் அவர் பேசினார்.
உலக வர்த்தகத்துக்குச் சிங்கப்பூர் உறுதுணையான நடுவமாகத் திகழ்வதாகத் திரு கான் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் நிறுவனங்களோடு சேர்ந்து செயல்பட்டால் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பல நல்ல வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.
அவற்றைப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : Others