Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

கரையோரப் பூந்தோட்டத்தில் கண்ணைப் பறிக்கும் சூரியகாந்திப் பூக்கள்

வாசிப்புநேரம் -
கரையோரப் பூந்தோட்டத்தில் கண்ணைப் பறிக்கும் சூரியகாந்திப் பூக்கள்

(படம்: Facebook/Gardens by the Bay)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரின் கரையோரப் பூந்தோட்டத்தில்(Gardens by the Bay) 5,000க்கும் மேற்பட்ட சூரியகாந்திப் பூக்களைக் கொண்ட புதிய கண்காட்சி தொடங்கியுள்ளது.

"Sunflower Surprise: Garden by the Ocean" என்பது அதன் பெயர்.

போர்ச்சுகல் நாட்டைக் கருப்பொருளாக வைத்து நடத்தப்படும் முதல் மலர்க் கண்காட்சி இது.

Related article image
(படம்: Facebook/Gardens by the Bay)

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் (Lisbon) உள்ள பழைமையான அல்ஃபாமா (Alfama) வட்டாரத்தைப் போன்ற காட்சிகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

கோஸ்ட்டா நோவா (Costa Nova) பகுதியில் உள்ள வண்ணக் கோடுகள் கொண்ட வீடுகளின் மாதிரிகளையும் பார்க்கலாம்.

6 மீட்டர் உயரமுள்ள கலங்கரை விளக்கத்தின் மாதிரியும் அமைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சி நவம்பர் 9ஆம் தேதி வரை Flower Domeஇல் நடைபெறும்.

சிங்கப்பூருக்கும் போர்ச்சுகலுக்கும் இடையிலான 45 ஆண்டு அரசதந்திர உறவைக் கொண்டாடும் வகையிலும் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேல் விவரங்களுக்கும் நுழைவுச்சீட்டுகளுக்கும் www.gardensbythebay.com.sg/sunflower

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்