Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சமூக ஒன்றுகூடல்களில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை 5-லிருந்து 2க்குக் குறைக்கப்படும்

சிங்கப்பூரில், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவுள்ளதாக, அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சமூக ஒன்றுகூடல்களில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை 5-லிருந்து 2க்குக் குறைக்கப்படும்

(படம்: CNA)

சிங்கப்பூரில், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவுள்ளதாக, அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூரில் கிருமிப்பரவல் அதிகரித்து வருவதாலும் புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகி வருவதாலும், அந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை, அந்தக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் என்று பணிக்குழு குறிப்பிட்டது.

சமூக ஒன்றுகூடல்களில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை, 5-லிருந்து 2க்குக் குறைக்கப்படும்.

ஒரே வீட்டில் அல்லது பொது இடங்களில் சந்திப்பதற்கான எண்ணிக்கையும் 2க்குக் குறைக்கப்படுகிறது.

பொதுமக்கள், தொடர்ந்து ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 முறை மட்டுமே ஒன்றுகூடலாம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

எனினும், ஒரு வீட்டிற்கு 2 பேர் மட்டுமே செல்லமுடியும் அல்லது 2 பேர் மட்டுமே ஒன்றுகூட முடியும்.

தாத்தா, பாட்டிகளின் பராமரிப்பில் விடப்படும் பேரப் பிள்ளைகள் அந்தக் கணக்கில் சேர்க்கப்பட மாட்டார்கள்.

தாத்தா, பாட்டிகள் COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.

அவர்கள், தங்களையும் தங்களது பேரப்பிள்ளைகளையும் கிருமித்தொற்றிலிருந்து பாதுகாக்க, தடுப்பூசி அவசியம் என்று குறிப்பிடப்பட்டது.

கிருமிப்பரவலைத் தடுக்க, தாத்தா பாட்டிமார் வெவ்வேறு வீடுகளில் வசிக்கும் பேரப்பிள்ளைகளைச் சந்திப்பதைக் குறைத்துக் கொள்ளுமாறும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்