Skip to main content
வெஸ்ட் கோஸ்ட்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி: அமைச்சர் டெஸ்மண்ட் லீ தலைமை; இரண்டு புதுமுகங்கள்

வாசிப்புநேரம் -
வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி: அமைச்சர் டெஸ்மண்ட் லீ தலைமை; இரண்டு புதுமுகங்கள்

(படம்: CNA/Lauren Chian)

வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி சார்பில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) தலைமையில் ஐவர் அணி போட்டியிடத் திட்டமிடுகிறது.

அவர்களில் 39 வயது மருத்துவர் ஹமிட் ரசாக்கும் (Hamid Razak), 33 வயது வழக்கறிஞர் கெசண்ட்ரா லீ (Cassandra Lee) ஆகிய இருவரும் புதுமுகங்கள்.

மேலும் இருவர் ஷான் ஹுவாங் (Shawn Huang), ஆங் வெய் நெங் (Ang Wei Neng).

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியிலிருந்தவர் திரு ஆங் வெய் நெங்.

அந்தக் குழுத்தொகுதி 2020 தேர்தலில் மிகக் கடுமையான போட்டியைச் சந்தித்தது.

மக்கள் செயல் கட்சி 51.69 விழுக்காட்டு வாக்குகள் பெற்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைத் (Progress Singapore Party - PSP) தோற்கடித்தது. PSPஇன் திரு லியோங் மன் வாய் (Leong Mun Wai), திருவாட்டி ஹேசல் புவா (Hazel Poa) ஆகிய இருவரும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்த முறை வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடப்போவதாக PSP கூறியிருக்கிறது.

பதிவுபெற்ற வாக்காளர்கள் எண்ணிக்கை 158,581 பேராக அதிகரித்துள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்