பொதுத்தேர்தல் 2025: ஜாலான் புசார் குழுத்தொகுதியில் அமைச்சர் ஜோசஃபின் தியோ தலைமையில் நால்வர் அணி
வாசிப்புநேரம் -

(படம்: CNA/Jeremy Long)
ஜாலான் புசார் குழுத்தொகுதியில் தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) தலைமையில் மக்கள் செயல் கட்சி சார்பில் நால்வர் கொண்ட அணி போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.
அணியில் ஒரு மாற்றம்.
வாம்போ (Whampoa) வட்டாரத்தில் 2001ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துவரும் தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஹெங் சீ ஹாவ் (Heng Chee How) இம்முறை குழுவில் இல்லை என்பதை அமைச்சர் தியோ உறுதிப்படுத்தினார்.
அவரின் இடத்தை முன்னாள் மூத்த அரசாங்க ஊழியர் ஷான் லோ (Shawn Loh) நிரப்புகிறார்.
அவருடன் டெனிஸ் புவா (Denise Phua), டாக்டர் வான் ரிஸால் (Wan Rizal) ஆகியோரும் உள்ளனர்.
2020 பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி, மக்கள் குரல் கட்சியை (Peoples Voice) 65.37 விழுக்காட்டு வாக்குகளில் வென்றது.
ஜாலான் புசார் குழுத்தொகுதியில் இம்முறையும் தாங்கள் போட்டியிட விரும்புவதாக மக்கள் குரல் கட்சி அறிவித்துள்ளது.
தொகுதியில் எல்லை மாற்றம் செய்யப்படவில்லை.
அந்தத் தொகுதியில் 106,102 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆதாரம் : CNA