Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2025: வெளிநாட்டில் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2025: வெளிநாட்டில் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன

(படம்: CNA/Syamil Sapari)

அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெளிநாட்டில் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதாகத் தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் உள்ளூரில் செலுத்தப்பட்ட வாக்கு விகிதத்தைப் போன்றே அந்த முடிவும் அமைந்திருப்பதாகக் கூறப்பட்டது.

செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதிக்கான வாக்குகளில் மட்டும் மாற்றம் காணப்பட்டது.

சிங்கப்பூர் ஜனநாயக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவானுக்கு (Chee Soon Juan) 23 வாக்குகளும் மக்கள் செயல் கட்சியின் திருவாட்டி போ லி சான்னுக்கு (Poh Li San) 21 வாக்குகளும் கிடைத்தன.

மொத்தம் 17,237 சிங்கப்பூரர்கள் வெளிநாட்டில் வாக்களித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்களின் வாக்குகளும் சேர்த்துச் செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் 2,438,610. அவற்றில் 42,945 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

வாக்களித்தோர் விகிதம் 92.38 விழுக்காடு எனவும் தேர்தல் துறை சொன்னது.
 
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்