Skip to main content
போட்டியின்றி வென்ற மரீன் பரேட்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

போட்டியின்றி வென்ற மரீன் பரேட் - பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி - சுமார் $390,000 செலவுசெய்த மக்கள் செயல் கட்சி

வாசிப்புநேரம் -
போட்டியின்றி வென்ற மரீன் பரேட் - பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி - சுமார் $390,000 செலவுசெய்த மக்கள் செயல் கட்சி

(கோப்புப் படம்: CNA/Syamil Sapari)

இவ்வாண்டின் பொதுத்தேர்தலில் மரீன் பரேட் - பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி அங்கு 388,756 வெள்ளி செலவு செய்துள்ளது.

தேர்தல் துறையின் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்ட ஆவணங்களில் அது தெரிவிக்கப்பட்டது.

மே 3ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது.

அதற்கான செலவினத்தைத் தெரிவித்த முதல் 5 மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரீன் பரேட் - பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதுவரை 35 வேட்பாளர்கள் தங்கள் செலவினம் பற்றி தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஆக அதிகமாக 104,085 வெள்ளி செலவு செய்தவர் திரு கோ பெய் மிங் (Goh Pei Ming).

அவர் மரீன் பரேட் - பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.

இணையம் சாராத தேர்தல் விளம்பரங்களுக்காகத் திரு கோ 52,650 வெள்ளியைப் பயன்படுத்தினார்.

பட்டியலில் இரண்டாமிடம் பிடித்தவர் மெக்பர்சன் (Macpherson) நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் (Tin Pei Ling).

அவர் 84,128 வெள்ளி செலவு செய்தார்.

குழுவில் எஞ்சிய 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 51,000 வெள்ளி முதல் 74,000 வெள்ளி வரை செலவு செய்துள்ளனர்.

அந்தத் தொகையின் பெரும்பகுதி துண்டு பிரசுரங்கள், பதாகைகள் ஆகியவற்றை அச்சிடப் பயன்படுத்தப்பட்டது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்