Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2025: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தலைமையில் 5 பேர் போட்டியிடத் திட்டம்

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2025: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தலைமையில் 5 பேர் போட்டியிடத் திட்டம்

(படம்: CNA/Lim Li Ting)

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (Masagos Zulkifli) தலைமையில் தெம்பனிஸ் (Tampines) குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் ஐவர் கொண்ட குழு போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.

அணியில் இருவர் புதுமுகங்கள்.

முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் டேவிட் நியோ (David Neo), துணைப் பேராசிரியர் சார்லின் சென் (Charlene Chen) ஆகியோர் அந்த இருவர்.

மூத்த துணையமைச்சர் கோ போ கூன் (Koh Poh Koon), மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் (Baey Yam Keng) ஆகியோரும் அணியில் உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலையில் அந்தக் குழுத்தொகுதியில் இடம்பெற்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுய் (Cheng Li Hui), முன்னாள் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின்னுடன்  (Tan Chuan-Jin) தகாத உறவைக் கொண்டிருந்த சர்ச்சைக்குப் பிறகு பதவி விலகினார்.

அதனால் அவரது இடம் காலியானது.

தெம்பனிஸ் குழுத்தொகுதியில் 147,904 வாக்காளர்கள் உள்ளனர்.

இதற்கிடையே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூ (Desmond Choo) தெம்பனிஸ் சங்காட் (Tampines Changkat) தனித்தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.

இதற்குமுன்னர் அவர் தெம்பனிஸ் நார்த் தொகுதியில் இருந்தார். 

அத்தொகுதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்