Skip to main content
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது; வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 23
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது; வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 23

வாசிப்புநேரம் -
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது; வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 23

(படம்: Parliament of Singapore/ Facebook)

சிங்கப்பூரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. வரும் 23ஆம் தேதி (புதன்கிழமை) வேட்பு மனுத் தாக்கல் தினம் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் நாடாளுமன்றத்தைக் கலைத்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரின் 14ஆவது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

பிரதமர் லாரன்ஸ் வோங்கின்கீழ் நடைபெறவிருக்கும் முதல் தேர்தல் இது.

சென்ற ஆண்டு மே மாதம் திரு வோங், பிரதமர் பொறுப்பை ஏற்றார்.

சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டப்படி, அமைச்சர்கள், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு பதவி துறக்கவேண்டியதில்லை.

அடுத்த நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் வரை அவர்கள் பொறுப்புகளைத் தொடர்வர்.


 

மேலும் செய்திகள் கட்டுரைகள்