Skip to main content
பொதுத்தேர்தல் வாக்குச்சீட்டுகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் வாக்குச்சீட்டுகள்- நவம்பர் 22இல் அழிக்கப்படும்

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் வாக்குச்சீட்டுகள்- நவம்பர் 22இல் அழிக்கப்படும்
கோப்புப் படம்: CNA TODAY/Ili Nadhirah Mansor
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இவ்வாண்டின் பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுகளும் இதர ஆவணங்களும் வரும் 22ஆம் தேதி அழிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 6 மாத காலத்திற்கு வாக்குச்சீட்டுகளும் இதர ஆவணங்களும் பாதுகாப்பாக உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்தன.

வரும் 22ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திலிருந்து துவாஸ் சௌத் எரியாலைக்கு அவை அனுப்பப்படும்.

அதனைப் பார்வையிட வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் அழைக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

உள்ளூர், வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் பொதுத்தேர்தல் 2025க்கு அளித்த வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 2,438,610. அவற்றில் 42,945 வாக்குகள் நிராகரிக்கப்பட்டவை.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்