பொதுத்தேர்தல் 2025: பாட்டாளிக் கட்சியின் முதற்கட்ட புதுமுகங்கள் அறிமுகம்

(படம்: இம்ரான்)
பாட்டாளிக் கட்சி நான்கு புதுமுகங்களை அறிமுகம் செய்தது.
அப்துல் முஹைமின் அப்துல் மாலிக் (Abdul Muhaimin Abdul Malik)

அல்ஜூனிட்- ஹவ்காங் நகர மன்றத்தில் 2015 முதல் பணியாற்றும் அவர் அண்மையில் செங்காங் குழுத்தொகுதியில் குடியிருப்பாளர்களை அதிகம் சந்தித்தார்.
அவர் செங்காங் குழுத்தொகுதியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கெனத் தியோங் (Kenneth Tiong)

தொழிலதிபரான அவர் அல்ஜூனிட் குழுத்தொகுதியில் அதிகம் தொண்டூழியம் செய்திருக்கிறார்.
அவர் அல்ஜூனிட் குழுத்தொகுதியில் போட்டியிடலாம்.
சிட்டி ஆலியா அப்துல் ரஹிம் மத்தார் (Siti Alia Binte Abdul Rahim Mattar)

வழக்கறிஞரான அவர் முன்னர் சிங்கப்பூர் நாணய வாரியத்தில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார்.
மூன்றுப் பிள்ளைகளுக்குத் தாயான அவர் ஓராண்டாகக் கட்சித் தொண்டூழியராக உள்ளார்.
இலீன் சோங் பெய் ஷான் (Eileen Chong Pei Shan)

கொடையாளர்களைச் சேர்க்கும் நிறுவனத்தில் பணியாற்றும் அவர் முன்பு வெளியுறவு அமைச்சில் பணியாற்றினார்.
கடந்த ஆண்டு முதல் அவர் கட்சியில் தொண்டூழியம் செய்கிறார்.
செய்தியாளர் கூட்டத்தில் பாட்டாளிக் கட்சி புதுமுகங்களை அறிமுகம் செய்தது.
மேலும் சில புதுமுகங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.