Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் உயிர்மருத்துவத் துறையின்கீழ் கட்டப்பட்டிருக்கும் 20 மில்லியன் வெள்ளி நிலையம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் உயிர்மருத்துவத் துறையின்கீழ் கட்டப்பட்டிருக்கும் 20 மில்லியன் வெள்ளி நிலையம்

படம்: Pixabay

சிங்கப்பூரின் உயிர்மருத்துவத் துறையின்கீழ் கட்டப்பட்டிருக்கும் புதிய நிலையத்தின் வாயிலாகக் குறைந்தது 100 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவியல், ஆய்வுக்கூடத் தொழில்நுட்பம், தளவாடம் தொடர்பான துறைகளைச் சார்ந்த வேலைவாய்ப்புகள் அவற்றில் அடங்கும்.

இணையம் வாயிலாக நடைபெற்ற நிலையத்தின் திறப்பு விழாவில் வர்த்தக, தொழில், கலாசார, சமூக, இளையர் துறை துணையமைச்சர் ஆல்வின் டான் (Alvin Tan) கலந்துகொண்டார்.

உயிர்மருத்துவ நிறுவனமான Genscriptஇன் புதிய நிலையம் Solaris@Kallang கட்டடத்தில் அமைந்துள்ளது.

20 மில்லியன் வெள்ளிச் செலவில் அது கட்டப்பட்டுள்ளது.

அதில் புரத உற்பத்தி வசதி இடம்பெற்றுள்ளது.

குறுகிய காலத்தில் அதிகப் புரதங்களை உற்பத்திசெய்யும் ஆற்றல் அதற்குண்டு.

நாட்டின் உற்பத்தி இலக்குகளை எட்டுவதில் உயிர்மருத்துவம் முக்கியப் பங்கு வகிப்பதாகத் திரு. ஆல்வின் டான் எடுத்துரைத்தார்.

அந்தத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

துறைசார்ந்த முன்னணி நிறுவனங்களைச் சிங்கப்பூருக்கு ஈர்க்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்