சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
கேலாங் செராயில் நோன்பு மாதக் குதூகலம்!
வாசிப்புநேரம் -

(கேலாங் செராய் ஒளியூட்டு; ரமதான் சந்தை - படங்கள்: நிருபர் சவுரியம்மாள் ராயப்பன்)
ஆண்டுதோறும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு கேலாங் செராய் வட்டாரம் ஒளியூட்டப்படுகிறது.
இன்று ஒளியூட்டு இடம்பெற்றது. அதை நேரில் காணச்சென்றது 'செய்தி'.
இன்று ஒளியூட்டு இடம்பெற்றது. அதை நேரில் காணச்சென்றது 'செய்தி'.
சாலையில் வண்ணவண்ண விளக்குகள், நோன்புப்பெருநாள் சந்தையில் விதவிதமாய் விற்கப்படும் விழாக்காலப் பொருள்கள், ருசியான உணவு என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்....
பலகாரங்கள், சிற்றுண்டி உணவுகள், குளிர்பானங்கள்...
வீட்டு அலங்காரப் பொருள்கள்...
பாரம்பரிய, நவீன ஆடைகள்...

காலணிகள், அணிகலன்கள்...

எனப் பற்பல கடைகளையும் வண்ணமயமான அலங்காரத்தையும் காணும்போது விழாக்காலக் குதூகலத்தை உணரமுடிகிறது!