Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"பொருள்களுக்குப் பணம் செலுத்தத் தேவையில்லை; இலவசமாகப் பெறலாம்..." - 'Give and Take MEGA Market'

வாசிப்புநேரம் -

குறைந்த வருமானக் குடும்பத்தைச் சேர்ந்தோர் அவர்களுக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக்கொள்வதில் சில நேரங்களில் சிரமங்களை எதிர்நோக்கலாம். 

அத்தகையோருக்கு ஆதரவாகச் சென்ற வாரயிறுதியில் Give and Take MEGA Market இடம்பெற்றது. மத்திய சிங்கப்பூர்ச் சமூக மேம்பாட்டு மன்றம் அதற்கு ஏற்பாடு செய்தது. 

அதில் சந்தை, கேளிக்கைப் பூங்கா எனச் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டன. 

Give - அளிக்கப்படுவது என்ன? 

  • பெரிய அளவிலான வர்த்தக ஆதரவாளர்கள் வழங்கும் பொருள்கள்
  • லாப நோக்கமற்ற தொண்டூழிய அமைப்புகளின் சேவை
  • குறைந்த வருமானக் குடும்பங்களுக்குச் சமூக மேம்பாட்டு மன்றம் வழங்கும் ஆதரவு

Take - பொருள்களையோ சேவைகளையோ இலவசமாகப் பெறலாம்:

வாடகை வீடுகளில் வசிக்கும் 600 குடும்பங்கள் சிறப்புச் சந்தைக்குச் செல்ல அழைப்பைப் பெற்றனர். 

வழங்கப்படும் பொருள்கள் / சேவைகளில் ஒருசில:

  • முடிதிருத்தும் சேவைகள்
  • பிள்ளைகளுக்கான கேளிக்கைச் சந்தை
  • அத்தியாவசியப் பொருள்கள்

Give and Take MEGA Marketக்குச் சென்ற திரு பழனி சோமசுந்தரம் 'செய்தி'யுடன் அவரது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். 

திரு பழனி யார்?

  • கம்போங் கிளாம் பீச் ரோட் வட்டாரத்தில் வசிப்பவர்
  • 19 வயதுக்குக் கீழ் உள்ள மூன்று பிள்ளைகளின் தந்தை
  • தமிழர் 

"என்னையும் என் குடும்பத்தையும் கிம் செங் (Kim Seng) பகுதிக்கு அழைத்துச் செல்லப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன" 

என்று திரு பழனி சொன்னார். 

அவரும் அவரது குடும்பத்தினரும் இடத்தை அடைந்ததும் தொண்டூழியர்கள் அவர்களுக்கான பொருள்களைத் தொகுத்துத் தயார் செய்திருந்தனர்.

அவர்களுக்கு உணவும் குளிர்பானமும் வழங்கப்பட்டன.

"அங்கு இருந்தபோது எதற்காகவும் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படவில்லை. நமக்குத் தேவையான அனைத்தும் மிகவிரைவில் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டன"

என்று மகிழ்ச்சியுடன் திரு பழனி சொன்னார். 

சந்தையில் தேவையான பொருள்களைக் கொண்ட 8 பகுதிகள் இருந்தன. அவற்றில் உணவுப் பொருள்கள், சுகாதாரப் பொருள்கள் எனப் பற்பல பொருள்கள் அடுக்கப்பட்டிருந்தன. 

FairPrice, Heartwarmers, Eu Yan Sang Singapore, Gardenia, Kellogg's போன்றவை அந்தப் பொருள்களை வழங்கின. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்