Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"ஊழியரணி செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த முழுமையான அணுகுமுறை தேவை" - கல்வி அமைச்சர்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ஊழியரணி செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த முழுமையான அணுகுமுறை தேவை என்று கல்வியமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்...

ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு ஆற்றலைப் பெறுவதற்கு நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும்...

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஊழியரணியைப் பெருக்க ஆய்வு நிலையங்கள் வழியமைக்க வேண்டும் என்றார் திரு.சான்.

எல்லாவற்றுக்கும் மேலாக அடிப்படைத் திறன்கள் வாழ்நாள் கற்றலுக்கு மிகவும் முக்கியம் என்றார் அவர்.

இளம் வயதிலிருந்தே வாழ்நாள் கற்றல் உணர்வைத் தூண்டவேண்டியது முக்கியம் என்று திரு சான் சொன்னார்.

உலகளாவிய வாழ்நாள் கற்றல் மாநாட்டில் அவர் பேசினார்.

மாநாட்டில் எட்டுச் செயற்கை நுண்ணறிவுக் கற்றல் தீர்வுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

வயது வித்தியாசமின்றி எல்லாரும் அவரவர் தேவைக்கேற்பக் கற்றல் அனுபவம் பெற இத்தகைய தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்