Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமிப்பரவல் சூழல் சிங்கப்பூர் இளையர்களின் மனநலத்தைப் பாதித்துள்ளது -ஆய்வு

கொரோனா கிருமிப்பரவல் சூழல் தங்கள் மனநலத்தைப் பாதித்திருப்பதாக இளையர்கள் பலர் கூறியுள்ளனர். 

வாசிப்புநேரம் -
கிருமிப்பரவல் சூழல் சிங்கப்பூர் இளையர்களின் மனநலத்தைப் பாதித்துள்ளது -ஆய்வு

(படம்: Today)

கொரோனா கிருமிப்பரவல் சூழல் தங்கள் மனநலத்தைப் பாதித்திருப்பதாக இளையர்கள் பலர் கூறியுள்ளனர்.

தேசிய இளையர் மன்றம் நடத்திய ஆய்வில் பங்கேற்ற சுமார் 50 விழுக்காட்டு இளையர்கள் அவ்வாறு தெரிவித்தனர்.

நிதி குறித்த எதிர்காலக் கண்ணோட்டம், வேலை வாய்ப்புகள் போன்றவை நிச்சயமற்றதாக இருப்பதைக் கவலை தரும் அம்சங்களாக இளையர்கள் குறிப்பிட்டனர்.

ஆய்வின் முடிவுகளைப் பகிர்ந்துக்கொண்ட சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, இளையர்களின் மனநலத்தை மேம்படுத்த உதவும் திட்டங்களுக்கு, ஒரு மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.

Musim Mas BlueStar* என்று அழைக்கப்படும் அந்த நிதி, அரசாங்கச் சார்பற்ற அமைப்புகள் நடத்தும் மனநலத் திட்டங்களுக்கு மானியம் வழங்கும்
என்று திரு. லீ குறிப்பிட்டார்.

மன நல மேம்பாடு தொடர்பான ஆய்வுகள், விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள், மனநல சிகிச்சை முறைகள், கல்வி போன்ற அம்சங்களுக்கும் நிதி பயன்படுத்தப்படும்.

இளையர்களால் உருவாக்கப்படும் திட்டங்களுக்கும், அந்த நிதியின் ஒரு பங்கு உதவும்.

மன நலப் பிரச்சினைகளைப் பற்றி இன்றைய இளையர்கள் கலந்துரையாட விரும்புவதாகத் திரு. லீ சொன்னார்.

மேலும், முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடுகையில் அவர்கள் சற்று வேறுபட்ட மன நலச் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவர் சுட்டினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்