தங்கம் கடத்தியதாகச் சந்தேகம் - நால்வர் மீது குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் பண மோசடி, தங்கம் கடத்தியது ஆகிய சந்தேகத்தில் நால்வர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர்களில் மூவர் ஆண்கள். ஒருவர் பெண்.
நால்வரும் 60 வயதிலிருந்து 63 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களை அவர்கள் நால்வரும் நடத்தியதாகத் தெரிகிறது.
குற்றக் கும்பலைச் சேர்ந்த சீன விநியோகிப்பாளர்கள் இருவரிடமிருந்து Signal converters கருவிகளுக்குள் தங்கம் மறைத்து வைத்து நால்வரும் இறக்குமதி செய்ததாகச் சொல்லப்படுகிறது.
உயர் தொழில்நுட்பக் கருவிகள் என்ற பெயரில் அவை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்டன.
பண மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரை சிறைத்தண்டனை, அதிகபட்சம் 500,000 வெள்ளி அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
வர்த்தக மோசடி நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரை சிறைத்தண்டனை, 15,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi