Skip to main content
வர்த்தகங்களுக்கு நிர்வாக நடைமுறைகள் தளர்வு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வர்த்தகங்களுக்கு நிர்வாக நடைமுறைகள் தளர்வு

வாசிப்புநேரம் -
வர்த்தகங்களுக்கு நிர்வாக நடைமுறைகள் தளர்வு

படம்: Google Street View

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வர்த்தகங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த உதவ நிர்வாக நடைமுறைகளை அரசாங்கம் குறைக்க விரும்புகிறது.

குறிப்பிட்ட வர்த்தக இடங்களில் செயல்பட அனுமதி நடைமுறைகள் விரைவில் எளிமையாக்கப்படும்.

வர்த்தகக் கட்டடத்தில் தகுதிபெறும் மருந்தகங்களை நடத்துவோர் சுகாதார அமைச்சின் அனுமதியைப் பெற்றால் போதும்.

நகரச் சீரமைப்பு ஆணையத்திடம் இனி விண்ணப்பம் செய்யவேண்டியதில்லை.

பொருளியல் நிலவரம் மாறிக்கொண்டிருக்கும் வேளையில் விதிமுறைகளும் தொடர்ந்து மாறவேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார்.

புதிய யோசனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்;

முன்கூட்டியே ஆராய்ந்து அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராய் இருக்கவேண்டும்;

வேகமாய் மாறிவரும் சூழலைக் கையாளத் தெரிந்திருக்கவேண்டும் என்றார் திரு சீ.

பத்தில் ஏழு வர்த்தகங்களுக்கு அதிகரிக்கும் செலவுகள் மிகப்பெரிய சவாலாக இருப்பது சிங்கப்பூர் சீனர் வர்த்தக, தொழிற்சபை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் தடம் பதிக்க முனையும் வர்த்தகங்களுக்கு ஆதரவளிக்கத் தொழிற்சபை அனைத்துலக ஆலோசனைக் குழுவை அறிமுகம் செய்கிறது.

சந்தை நிலவரம் குறித்த விவரங்களைக் கொடுக்கவும் தொழில் தொடர்புகளை வலுப்படுத்தவும் அது கைகொடுக்கும்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்