Skip to main content
மேகன் குங் துன்புறுத்தல் விவகாரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மேகன் குங் துன்புறுத்தல் விவகாரம் - "சமூகச் சேவை அமைப்பு மீது பழிபோடவில்லை"

வாசிப்புநேரம் -
மேகன் குங் (Megan Khung) துன்புறுத்தல் விவகாரத்தில் Beyond Social Services சமூகச் சேவை அமைப்பின்மீது பழி போட எண்ணவில்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

சிறுமி படித்த பாலர்பள்ளியை நிர்வகிக்கும் Beyond Social Services அமைப்பு அவரின் காயங்களைக் குறைத்து மதிப்பிட்டுச் சொன்னதால் தகுந்த நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கூறியிருந்தது.

எனினும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, காவல்துறை போன்ற தரப்புகள் எடுத்த நடவடிக்கைகளில் பல குறைகள் இருந்ததாக அண்மையில் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டது.

அது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

சமூகச் சேவை ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) பதிலளித்தார்.

சம்பவத்தில் என்ன நடந்தது...அதைக் கையாண்ட விதத்தில் எத்தகைய குறைகள் இருந்தன...அவற்றை எப்படிச் சரிசெய்வது என்பது மட்டுமே அரசாங்கத்தின் எண்ணமாக இருந்தது;

யார் மீதும் பழிபோடும் எண்ணமில்லை என்று அவர் கூறினார்.

அது குறித்துத் தவறான கருத்துகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் சம்பந்தப்பட்ட சமூக அமைப்புகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளதாகத் திரு லீ சொன்னார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்