Skip to main content
அரசாங்க அதிகாரிகள் திறனை மேம்படுத்த ஆதரவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அரசாங்க அதிகாரிகள் திறனை மேம்படுத்த ஆதரவு - தற்காப்பு அமைச்சர் சான்

வாசிப்புநேரம் -
அரசாங்க அதிகாரிகள் திறனை மேம்படுத்த ஆதரவு -   தற்காப்பு அமைச்சர் சான்
படம்: Facebook/People's Action Party
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் (Chan Shun Sing) காலமாற்றத்துக்கு ஏற்ப அரசாங்க அதிகாரிகள் நவீனத் திறன்களை பெற்றிருக்க அரசாங்கம் தொடர்ந்து வழி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், பசுமைத் தொழில்நுட்பம் உள்ளிட்டவையும் அதில் அடங்கும்.

முறையான பயிற்சி வகுப்புகள், பணியிடைப் பயிற்சி, பொதுச் சேவைக்கு வெளியே இணைந்து செயல்படுவது, வேறு வகைக் கற்றல் முறைகள் போன்றவற்றின் மூலம் அரசாங்க அதிகாரிகள் திறன்களை மெருகேற்றிக்கொள்வதாகத் திரு சான் கூறினார்.

பொதுச் சேவைத் துறை காலத்துக்குப் பொருத்தமாக இருக்கும் அதேவேளை, வருங்காலத்துக்குத் தயாராய் இருப்பதையும் உறுதிசெய்ய அரசாங்கம் தொடர்ந்து முதலீடு செய்யும் என்றார் அவர்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்