போக்குவரத்துச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு
(கோப்புப் படம்: Wee Teck Hian/TODAY)
This audio is generated by an AI tool.
போக்குவரத்துச் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்குத் தற்காலிக நிதி ஆதரவு வழங்கவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்துக் கட்டணங்கள் மூலம் பெறும் வருமானத்தில் சுமார் 13 விழுக்காட்டுத் தொகையை நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள், உடற்குறையுள்ளோர், மூத்தோர், நோயாளிகள் ஆகியோருக்கான போக்குவரத்துச் சேவையளிக்கும் நிறுவனங்கள் அந்தத் திட்டத்தில் பயனடையவுள்ளன.
மத்திய கிழக்குப் போரினால் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
அந்தத் தாக்கத்தைச் சமாளிக்க ஆதரவு வழங்கப்படுகிறது என்று கல்வி, சமுதாய, குடும்ப மேம்பாட்டு, சுகாதார அமைச்சுகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் தொடங்கி ஜூன் வரை நிதி ஆதரவு வழங்கப்படும்.
அதன் பிறகு எரிபொருள் விலை உயர்வு நீடித்தால் போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு என்று அமைச்சுகள் கூறின.
கட்டணம் உயர்வதற்கு முன் பெற்றோரும் பராமரிப்பாளர்களும் தேவைப்பட்டால் மாற்று ஏற்பாடுகளைச் செய்யலாம்.
அதற்குப் போதிய அவகாசம் அளிக்க நிதி ஆதரவு உதவும் என்று அமைச்சுகள் குறிப்பிட்டன.