Skip to main content
கூட்டுரிமை வீடுகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கூட்டுரிமை வீடுகள் - நிர்வகிக்கும் நிறுவனங்களிடம் நிதி இருப்பது முக்கியம்

வாசிப்புநேரம் -
கூட்டுரிமை வீடுகள் - நிர்வகிக்கும் நிறுவனங்களிடம் நிதி இருப்பது முக்கியம்
(கோப்புப் படம்: Reuters)
வெளியீடு : 04 Mar 2026 05:08PM புதுப்பிப்பு : 04 Mar 2026 07:05PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கூட்டுரிமை வீடுகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள், அவற்றின் நிதி நிலைமையை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பது குறித்து ஆராயப்படுகிறது.

பழுதுபார்ப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளப் பணம் இருக்கிறதா என்பது தெரிய வேண்டும்.

தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் இன்று அது பற்றிப் பேசினார்.

பழைய வீடுகளில் மேம்பாட்டு, பழுதுபார்ப்புப் பணிகளுக்குப் போதுமான நிதி இருப்பதை உறுதிசெய்வது அவசியம் என்று கட்டட, கட்டுமான ஆணையம் குறிப்பிட்டது.

இதற்கிடையே, வழக்கமாக மின்தூக்கிகள் பழுதான பிறகே அவற்றை மாற்றுவதற்காக நிதி திரட்டப்படும்.

போதிய நிதி இல்லாமல் போனால் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அது உரிமையாளர்களுக்குச் சிக்கலாகக்கூடும் என்றும் அவர் சொன்னார்.

நிர்வாகம் அதற்கான நிதியிருப்பை முன்கூட்டியே திட்டமிடத் தொடங்கினால் அத்தகைய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என்று அமைச்சர் இந்திராணி கூறினார்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்