Skip to main content
"CareShield Life கட்டுப்படியான விலையில் இருக்கும்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"CareShield Life கட்டுப்படியான விலையில் இருக்கும்"

வாசிப்புநேரம் -
CareShield Life காப்புறுதித் திட்டம் கட்டுப்படியான விலையிலும் அனைவரையும் உள்ளடக்கும் முறையில், எளிதில் பெறக்கூடியதாகவும் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்.

வழங்குதொகை அதிகரிக்கிறது, தகுதிபெறும் விதிமுறைகள் கடுமையாகின்றன.

இவ்வேளையில் அரசாங்கம் அந்த உறுதியை வழங்கியுள்ளது.

கடுமையான உடற்குறையுள்ளோருக்கு நிதி ஆதரவு வழங்கி, மாதாந்திர ரொக்க வழங்குதொகையைத் தரும் நீண்டகாலப் பராமரிப்புக் காப்புறுதித் திட்டம், CareShield Life.

அதில் உள்ள வெளிப்படைத்தன்மை, பாலினச் சமத்துவம், நியாயம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

விலைவாசி அதிகரிக்கும் வேளையில் ரொக்க வழங்குதொகை எவ்வாறு பயனளிக்கும் என்று கேட்கப்பட்டது.

சொத்து மதிப்பின் வழி நிர்ணயிக்கப்படும் ரொக்கத் தொகை, வேலை ஓய்வு பெறுவோரைப் பாதிக்கும் என்றும் அக்கறை தெரிவிக்கப்பட்டது.

சந்தா செலுத்தச் சிரமப்படும் குறைந்த வருமானக் குடும்பங்கள் அல்லது வேலை இழந்தோருக்கு வழங்கப்படும் ஆதரவு பற்றியும் கேட்கப்பட்டது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் சந்தா செலுத்துவதற்கு ஆதரவு வழங்க அரசாங்கம் கூடுதலாக 570 மில்லியன் வெள்ளியை ஒதுக்குகிறது.

நிதி உதவி தேவைப்படுவோருக்கு CareShield Life தொடர்ந்து பயனளிக்க அவ்வாறு செய்யப்படுகிறது.

திட்டத்தின் கீழ் பெண்கள் கூடுதலாகச் சந்தா செலுத்துவதை உறுப்பினர்கள் சுட்டினர்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்