Skip to main content
அரசாங்கம் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அரசாங்கம் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்

வாசிப்புநேரம் -
அரசாங்கம் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்

படம்: AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் அரசாங்கத் துறை மின்சாரப் பயனீட்டைக் குறைக்கவிருக்கிறது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் தேசியச் சுற்றுப்புற அமைப்பும் இன்று கூட்டறிக்கை வெளியிட்டன.

மத்திய கிழக்குப் போர் எரிபொருள் விநியோகத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.

இந்த வேளையில் எரிசக்தியை நிலையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அமைச்சுகள், ஆணைபெற்ற கழகங்கள் உள்ளிட்டவை மின் சேமிப்பு நடைமுறைகளைப் பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அவற்றுள் சில நடைமுறைகள்...

📌 குளிர்சாதனத்தை 25 டிகிரி செல்ஸியஸ் அல்லது அதைவிட அதிகமாக வைத்திருக்கவேண்டும்.

📌 தேவையற்ற சாதனங்களின் பயன்பாடு முடக்கப்படும்.

📌 எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் சாதனங்கள் விரைவாகப் பொருத்தப்படும்.

அரசாங்கத் துறை ஊழியர்களும் மின் சக்தி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அரசாங்கம் மின் சேமிப்பில் உறுதியாக இருக்கிறது.

நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறது என்று அமைச்சும் தேசியச் சுற்றுப்புற அமைப்பும் கூறின.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்