Skip to main content
அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் - இரு மலேசியர்கள் கைது

வாசிப்புநேரம் -
அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் - இரு மலேசியர்கள் கைது
(படம்: Singapore Police Force)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 10 Nov 2025 09:28AM புதுப்பிப்பு : 10 Nov 2025 09:29AM
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளைப் போல் வேடமிட்டு ஒரு பெண்ணை ஏமாற்றியதாகச் சந்தேகிக்கப்படும் இருவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

இருவரும் 22 வயது, 38 வயதுடைய மலேசிய ஆடவர்கள்.

சட்ட அமைச்சு, சிங்கப்பூர் நாணய வாரியம் ஆகியவற்றின் அதிகாரிகள் போல் ஆள்மாற்றம் செய்து அவர்கள் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

ஒருவர் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து கடன்பற்று அட்டைக்கு ஒரு மில்லியன் வெள்ளியை மாற்றச் செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் அந்தக் கடன்பற்று அட்டையைக் கொண்டு முஸ்தாபா சென்ட்டரில் 412,000 வெள்ளிக்கு நகை வாங்குமாறு அந்தப் பெண்ணிடம் தெரிவிக்கப்பட்டது.

அதே நாளன்று அந்த நகையை வேறொருவரிடம் பெண் ஒப்படைத்தார்.

பிறகு சந்தேகம் ஏற்பட்டு அந்தப் பெண் காவல்துறையிடம் புகார் செய்தார்.

இவ்வாண்டின் முதல் 6 மாதத்தில் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 20,000 மோசடிச் சம்பவங்களில் பொது மக்கள் 450 மில்லியன் வெள்ளிக்கு மேல் பறிகொடுத்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை, 500,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அவர்களுக்கு 6 முதல் 24 பிரம்படிகள் வரையும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்