Skip to main content
ஆள்மாறாட்ட மோசடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆள்மாறாட்ட மோசடி - சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மலேசிய ஆடவர்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அரசாங்க அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும்  நபர் காவல்துறையின் விசாரணையில் உதவுகிறார்.

36 வயது யாப் சொங் சியா (Yeap Chong Siah) மலேசியாவைச் சேர்ந்தவர்.

யாப்பைக் காவல்துறை அதிகாரிகள் புளோக் 46 பியோ கிரெசண்ட்டிற்கு (Beo Crescent) அழைத்துச் சென்றனர்.

யாப் கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

யாப் சிங்கப்பூரர்களை ஏமாற்றி 122,000 வெள்ளி மதிப்பிலான பணத்தையும் நகையையும் அபகரித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

குற்றங்கள் டிசம்பர் மாதத்திலிருந்து ஜனவரி வரை நடந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் ஜனவரி 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவர் வேறொருவருக்கு உதவி புரிந்ததாகவும் நம்பப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுச் சிறை, 500,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பிரம்படியும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்