அரசாங்கச் செலவினம் பத்தாண்டில் இருமடங்கானது
சிங்கப்பூரில் சமூக மேம்பாட்டில் கூடுதலாகச் செலவு செய்யப்படுகிறது.
சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பில் செய்யப்பட்ட முதலீடுகளால் அந்தத் தொகை கடந்த பத்தாண்டில் இரட்டிப்பாகியுள்ளது.
நிதியாண்டில் எவ்வளவு செலவிடவேண்டும் என்பதைக் கணித்து வெளியிடப்படுகிறது நாட்டின் வரவுசெலவுத் திட்டம்.
கடந்த பத்து ஆண்டுகளில் சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்டம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.
அதேபோல் சமூக மேம்பாட்டில் செலவிடப்படும் நிதியும் அதிகரித்திருக்கிறது.
2015 நிதியாண்டில் சமூக மேம்பாட்டில் மட்டும் 31 பில்லியன் வெள்ளிக்கும் அதிகமாகச் செலவு செய்யப்பட்டிருந்தது.
பத்தாண்டுகள் கழித்துக் கடந்த நிதியாண்டில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் 60 பில்லியன் வெள்ளிக்கு மேல் செலவு செய்யப்பட்டிருந்ததாய் மதிப்பிடப்பட்டுள்ளது.
சமூக மேம்பாட்டு அமைப்புகள் எதில் கவனம் செலுத்துகின்றன?
1. வாழ்க்கைச் செலவின நெருக்கடிகளைக் குறைப்பதற்கான ரொக்கம்
2. பயனீட்டுக் கட்டணக் கழிவுகள்
3. சேமிப்புக் கணக்குகளில் நிரப்புத் தொகைகள்
4. ஊழியரணித் திறன்களை மேம்படுத்துவதற்கான உற்பத்தி ஊக்கத்தொகை
ஆகியவை அவற்றுள் சில.
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் வரும் 12 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.