Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் சைகை மொழி அங்கீகரிக்கப்படுமா?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் சைகை மொழியை அங்கீகரிப்பது பற்றி அரசாங்கம் ஆராய்கிறது.

அவ்வாறு செய்வதன் மூலம் செவிப்புலன் குன்றியோர் எந்த அளவு பயனடைய முடியும் என்பதைப் பார்க்கவேண்டும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.

செவிப்புலன் குன்றியோருக்கான சேவைகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்று அமைச்சு சொன்னது.

சிங்கப்பூர் சைகை மொழி இங்குள்ள சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கல்வி சார்ந்த பயிற்றுவிப்பு முறைகளுக்கும் தகவல் பரிமாற்றத்துக்கும் அது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

செவிப்புலன் குறைபாடு இருப்பதாக அடையாளம் காணப்படும் மாணவர்களுக்குச் சிங்கப்பூர் சைகை மொழியை வழங்கப் பள்ளிகளுக்கு உதவி அளிக்கப்படுகிறது.

தேசிய அளவில் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போது சிங்கப்பூர் சைகை மொழி பயன்படுத்தப்படுகிறது.

தேசிய தினக் கூட்ட உரை, வரவுசெலவுத் திட்டம் முதலியவை அவற்றுள் அடங்கும்.

அரசாங்கத் தகவல்கள் செவிப்புலன் குன்றியோரை மேலும் எளிதில் சென்றடையும் முயற்சிகளைத் தொடர்பு, தகவல் அமைச்சு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்