Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சமூக ஊடக நிறுவனங்கள் சட்டத்தை மதித்து நடப்பது உறுதி செய்யப்படும்: சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் உள்ள சமூக ஊடக நிறுவனங்கள் சட்டப்படி நடந்து கொள்வதை அரசாங்கம் உறுதிசெய்யும். வரும் பொதுத் தேர்தலுக்கு முன் அதைச் செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அரசாங்கம் இணைந்து செயல்படும்.

குறிப்பாக அந்நியத் தலையீடுகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சமூக ஊடகங்களின் பொறுப்பை வலியுறுத்தும் வகையில் அந்த முயற்சிகள் அமையும்.

நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு உள்துறை துணையமைச்சர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) பதிலளித்தார்.

வெளிநாட்டு அமைப்புகள் சமூக ஊடகக் கணக்கீட்டுச் செயல்முறையை மாற்ற முயன்றால் அது அந்நியத் தலையீடாகக் கருதப்படும் என்று திருவாட்டி சுன் சொன்னார்.

தேர்தல் நேரத்தில் பொய்த் தகவல்கள் பகிரப்பட்டால், POFMA சட்டத்தின்கீழ் அரசாங்கம் திருத்த உத்தரவைப் பிறப்பிக்கும் என்று அவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்