Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Grab உணவு விநியோகிப்பாளர் திருடுவதைக் காட்டும் காணொளி கேமராவில் பதிவு

Grab உணவு விநியோகிப்பாளர், ஒரு வீட்டுக்கு வெளியே உலர வைக்கப்பட்டிருந்த துண்டைத் திருடும் சம்பவம் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
Grab உணவு விநியோகிப்பாளர் திருடுவதைக் காட்டும் காணொளி கேமராவில் பதிவு

(படம்: Muhd Ismail/Facebook)

வெளியீடு : 04 Jul 2019 03:32PM புதுப்பிப்பு : 04 Jul 2019 03:36PM

Grab உணவு விநியோகிப்பாளர், ஒரு வீட்டுக்கு வெளியே உலர வைக்கப்பட்டிருந்த துண்டைத் திருடும் சம்பவம் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருக்கிறது.

அண்மையில் Grab உணவு விநியோகிப்பாளர், வாடிக்கையாளரின் வீட்டிற்கு வெளியே இருந்த காலணிகளைத் திருடிய சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மற்றொரு Grab உணவு விநியோகிப்பாளர், துண்டு திருடும் சம்பவம் குறித்த காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. 

Facebook-இல் பகிரப்பட்ட அந்தக் காணொளியில், Grab நிறுவனத்தின் T-சட்டை அணிந்திருந்த ஆடவர், வீடமைப்புக் வளர்ச்சிக் கழகக் குடியிருப்பு வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த நீல நிறத் துண்டைத் திருடும் காட்சி பதிவாகியுள்ளது.

Facebook பயனீட்டாளர் முகமது இஸ்மாயில் பதிவேற்றிய காணொளி 43,000க்கும் அதிகமான முறை பார்வையிடப்பட்டுள்ளது.
அந்தக் காணொளி குறித்து விசாரித்து வருவதாக Grab நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் விநியோகிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் Grab குறிப்பிட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூவாண்டு வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம். 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்