Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விரைவுச்சாலையில் Grab காரை ஓட்டிய ஆண் ஓட்டுநர் மானபங்கம்...

வாசிப்புநேரம் -

Grab காரை ஓட்டிய ஆடவரை இரண்டு ஆண்கள் மானபங்கம் செய்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

40 வயது கோ சுவெட் ஹோங்கும் (Goh Suet Hong) 41 வயது நியோ வெய் மெங்கும் (Neo Wei Meng) அந்தக் குற்றத்தைப் புரிந்ததாக இன்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. 

அந்தச் சம்பவம் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மத்திய விரைவுச்சாலையில் பின்னிரவு சுமார் 1 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றது. 

அப்போது 28 வயது ஆடவரான அந்த ஓட்டுநரின் காரில் ஏறியதும் இருவரும் அவரிடம்  விந்தையான முறையில் பேசியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. 

பின்னர், மத்திய விரைவுச்சாலையில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர்கள் இருவரும் ஓட்டுநரைத் தகாதமுறையில் தொட்டனர். 

அவ்வாறு செய்யவேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டும் அவர்கள் இருவரும் தொடர்ந்து ஓட்டுநரைத் தகாதமுறையில் தொட்டனர். 

விரைவுச்சாலையில் காவல்துறைக் கார் ஒன்று வெளியேறிக்கொண்டிருந்ததைக் கவனித்த பின்னரே அவ்வாறு செய்வதை அவர்கள் நிறுத்தினர். 

நியோவை ஹவ்காங்கில் இறக்கிவிட்ட பிறகு, கோ காரின் முன்புறம்  இருக்கும் பயணி இருக்கைக்கு இடமாறினார். பின்னர், அவர் தொடர்ந்து தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

கோவை இறக்கியபின், ஓட்டுநர் அங்கிருந்து வெளியேறி, பின்னர் காவல்துறையிடம் புகார் செய்தார். 

ஒருவரை மானபங்கப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி, அபராதம் அல்லது இவற்றில் இரண்டு அல்லது மூன்று தண்டனைகள் விதிக்கப்படலாம்.
 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்